கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது தீவிரமடைந்துள்ளநிலையில் தற்போது திரையுலக பிரபலங்களும் அதிக அளவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
திரிஷா, மீனா, சத்யராஜ், குஷ்பூ,பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்திசுரேஷ் கூறியுள்ளதாவது, “எனக்கு இன்று லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிகவும் கவனமாககடைபிடித்து வந்த நிலையில், எப்படியோ எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வைரஸ் பரவலின் வேகம் நம்மை பயமுறுத்துகிறது.தயவு செய்து கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டதுடன், கொரோனாவுக்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். ‘
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள் . இதுவரை யாரேனும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க முடியும்.கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு, படப்பிடிப்புக்கு செல்வேன் என நான் நம்புகிறேன். இவ்வாறு கீர்த்திசுரேஷ் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 11, 2022