கடந்த 2006-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி கதாநாயகனாக நாயகனாக அறிமுகமான படம் ‘தலைநகரம்’. சுராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், வடிவேலு போஸ்ட் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் உள்ளிட்ட பலர் சுந்தர்.சியுடன் நடித்திருந்தனர். இதில் வடிவேலு நடித்து இருந்த நாய் சேகர் கதாபாத்திரமும் அவரது நகைச்சுவை காட்சிகளும் இன்றளவும் பிரபலம்.
இந்நிலையில் சுந்தர்.சி நாயகனாக நடிக்கும் ‘தலைநகரம் 2’ படத்தை வி.இசட்.துரை. இயக்கவுள்ளதாகவும் . இப்படத்தை ‘ரைட் ஐ’ தியேட்டர் படநிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது இதில் வடிவேலுவை மீண்டும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.