24 HRS புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் “ஒன் 2 ஒன்” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார்.இப்படத்தின் பூஜை இன்றுகாலை நடந்தது.
திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விரைவில் அந்த நடிகர் பற்றி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது