‘கபாலி’ இசை வெளியீட்டிற்காக ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர் . ஆனால், அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் சென்னை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் , யாரையும் அழைக்காமல்,மிகவும் ரகசியமாக இன்று மாலை (ஜூன் 11) சென்னை சத்யம் திரையரங்கில் பாடலை ரிலீஸ் செய்துவிட்டனர். தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் பா. இரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அவருடைய மனைவி உள்ளிட்ட ஒருசில படக்குழுவினர் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் இருக்கும் ரஜினியுடன் லதா ரஜினிகாந்தும், ஐஸ்வர்யா தனுஷும் இருப்பதால், ரஜினி சார்பில் செளந்தர்யா மட்டுமே கலந்து கொண்டார். பெயருக்கு ஒரே ஒரு சி.டி .மட்டுமே நிகழ்ச்சிக்கு கொண்டுவரப்பட்டது. அந்த சிடியை செளந்தர்யாவே கையோடு எடுத்துச் சென்று விட்டார்.. உலக ரஜினி ரசிகர்கள் மத்தியில் பிரமாண்டமாக கொண்டாடியிருக்க வேண்டிய இசை வெளியீட்டு விழா, இப்படி நான்கு பேருக்கு மத்தியில் மிகவும் ரகசியமாக நடைபெற்றதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். ரஜினி உடல் நிலை குறித்து தெளிவாக அறிவிக்கப்படாததால் கோபத்திலும் குமுறி வருகின்றனர்.