சித்ராலயா கோபு கைவண்ணத்தில், தேங்காய் சீனிவாசன், முத்துராமன்,மனோரமா,சுருளிராஜன் ஸ்ரீகாந்த்,லட்சுமி ஆகியோரது நடிப்பில் 197o களில் வெளியான திரைப்படம் ‘காசே தான் கடவுளடா’.கிட்டதட்ட 44 . வருடங்கள் கழிந்த நிலையில் இப்படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகக்குழுவினரின் நடிப்பில் நாடமாகிறது.
இப்படம் திரைப்படமாவதற்கு முன்னால் சித்ராலயா கோபு குழுவினரால் நாடகமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சித்ராலயா கோபு மற்றும் அவரது மகன் ஸ்ரீராம் ஆகியோரின் கைவண்ணத்தில் மாற்றியமைக்கப்பட்ட சில காட்சிகளுடன் நாடகமாக அரங்கேறுகிறது. இதில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்க மற்ற கதாபாத்திரங்களில் அவரது குழுவினர் யுவஸ்ரீ,கோபுபாபு,சுப்புணி,பிருந்தா ராமசந்திர ராவ், உசேன்,உள்பட பலர் நடிக்கின்றனர்’ இது குறித்து ஒய்.ஜி.மகேந்திரன் கூறியதாவது,நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் சினிமா எவ்வளவோ முன்னேறியிருந்தாலும் தற்போது மீண்டும் நாடகத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது நாடகக்கலை அழிந்து விடுமோ என என் போன்றோர் கவலை கொண்ட நேரத்தில் மீண்டும் புத்துயிர் கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
எனவே நாடக்கலையை மெருகூட்டும் நோக்கில் கவலையை மறந்து மக்கள் சிரிக்கக் கூடிய வகையில் உருவான ‘காசே தான் கடவுளடா திரைப்படத்தை மீண்டும் நாடகமாக்க இருக்கிறோம். சென்னையில் வரும் 17-ந்தேதி ராமாராவ் அரங்கத்திலும் அதை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் அரங்கேற்ற இருக்கிறோம். அமெரிக்கா,லண்டன் ஆகிய நாடுகளிலும் நடத்த உள்ளோம் என்கிறார்.
Stage Play Schedule:
June 17th – Rama Rau Auditorium – Inauguration 6.45 PM
June 18th – Bharat Kalachar – 6.45 PM
June 19th – Vani Mahal – 4 PM
June 20th – PSI High School – 6.45 PM
June 21st – PSI High School – 6.45 PM
June 22nd – PSI High School – 6.45 PM
June 23rd – PSI High School – 6.45 PM
June 24th – PSI High School – 6.45 PM
June 25th – Awards Function – NGS
June 26th – PSI High School – 4 PM & 7PM
Produced by UAA
Written by Chitralaya Gopu & Sriram
Dramatised Directed by Y Gee Mahendra.