இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகன் புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார். இந்த தொடரைஅவரது உதவியாளர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
வரும் பிப்ரவரி 2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது.இத் தொடரின் ஒளிப்பதிவை சிவா GRN கவனிக்க, பரத் சங்கர் இசையமைத்து வருகிறார்.