தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவ்விவகாரத்தில் மிகவும் அப்செட்டான ரஜினி தனிமையை நாடி கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் இதனை உறுதி செய்திருந்தாலும் இன்னும் சட்டப்படி பிரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இருதரப்பு குடும்பத்து பிரமுகர்களும்,திரையுலக இரண்டு முக்கிய பிரபலங்களும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சித்து வருகின்றனர்
குழந்தைகளுக்காகவது மீண்டும் தனுஷ், ஐஸ்வர்யா தங்களது கருத்துவேறுபாடுகளை மறந்து இணைந்து வாழ வேண்டும் என திரையுலக பிரமுகர்கள் பலரும் அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில்நடிகர் தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா இவ்விவகாரம் குறித்து கூறியுள்ளதாவது, ‘தனுஷ், ஐஸ்வரியா கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது கணவன் மனைவி இடையே நடக்கும் குடும்ப சண்டை தான்.
பேசி தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது இருவரும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை இதை பெரிது படுத்த வேண்டாம்’ என்றும் கூறியுள்ளார்..