பிரிவுக்கு கட்டியம் கூறி விட்டாலும் ,அதிகாரப்பூர்வமாக மணவிலக்கு பெறாத காரணத்தால் “தனுஷ் என்கிற பெயரை உனது பெயரிலிருந்து எடுத்து விடாதே என்று கூறப்பட்டதால் இன்னமும் நான் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ் ” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா தனுஷ்.
இவரும் ,தனுஷும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் உள்ள சித்தாரா ஹோட்டலில் வெவ்வேறு அறைகளில் தங்கி இருக்கிறார்கள் என்பதாக கூறப்பட்டது.
உண்மைதான்.
கடந்த இரண்டு நாட்களாக அந்த ஓட்டலில் ஐஸ்வர்யாவுடன் பே பிலிம்ஸ் சல்மான் சேக் ,சம்பத், ஆகியோர் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஏன் ,எதற்காக அந்த ஆலோசனை?
வரவிருக்கிற காதலர் நாளன்று ஒரு லவ் வீடியோ வெளியாகவிருக்கிறது. முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னின் சகோதரர் ராஜீவ் சென் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . காதல் மணம் கமழுகிற அந்த வீடியோவில் காதலியாக நடிப்பவர் யார் தெரியுமா?
கார்த்தியுடன் விருமன் படத்தில் நடித்திருக்கிறார் ,பெயர் அதிதி சங்கர்.இயக்குநர் ஷங்கரின் மகள்.!இந்த வீடியோவை இயக்குபவர்தான் ஐஸ்வர்யா தனுஷ்.
காட்சி எப்படி இருக்குமாம் ?
பாவேந்தன் பாரதிதாசன்தான் நினைவுக்கு வந்தார்.
“தாமரை பூத்த குளத்தினிலே -முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள் -அந்த
கோமளவல்லியை கண்டு விட்டான்-குப்பன்
கொள்ளை கொடுத்தான் உள்ளத்தினை
முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு
முழுமதி போல நனைந்திருக்கும் -தன்
துகிலினைப் பற்றி துறைக்கு வந்தாள் -குப்பன்
சோர்ந்து விட்டானந்தக் காமன் அம்பால் !”
இப்படியும் இருக்குமாம்.!!
இந்த வீடியோவை டிப்ஸ் வெளியிடுகிறது. பே பிலிம்ஸ் வெளியிட்டிருக்கிற இன்ஸ்டராவில் கணவனின் பெயருடன்தான் ஐஸ்வர்யாவின் பெயர் இருக்கிறது.
இதற்கு என்ன சொல்கிறார்கள் என்றால் விவாகரத்துக்கான சட்டபூர்வமான கதவு இன்னமும் திறக்கப்படாததால் ,சொத்துக்கள் பிரிக்கப்படாததால் பெயரில் தனுஷ் பெயர் இருக்கட்டும் என்பதாக சொல்லிவிட்டார்களாம்.
காதலால் ஒன்று பட்ட ஐஸ்வர்யாவின் காதலர் தின பரிசினை பார்த்தீர்களா?
நல்லவை நடக்காதா என்று எதிர்பார்த்தவர்களுக்கு இது ஒரு வகையில் ஏமாற்றம் என்றாலும் இன்னமும் கமாவில் தான் நிற்கிறது.
முற்றுப்புள்ளி விழ வில்லையே! பார்க்கலாம்.!