இயக்குநர் சி.எஸ். அமுதன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் “ரத்தம்” படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள் !
மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா , ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் “ரத்தம்” படத்தில் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்துஅடுத்தடுத்து பல படங்கள் வரவிருக்கின்றன. இயக்குநர் சி.எஸ்.அமுதனுடன் அவர் நடிக்கும் ‘ரத்தம்’படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தவிர, இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர-நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்கேற்றிருப்பது படத்திற்கு பெரும் மதிப்பை தந்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் திரையுலகின் முன்னணி நடிகைகளான மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர் என்பது படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
இது ஒரு அரசியல் திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ஜெகன் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு கோபி அமர்நாத், இசையமைப்பாளர் கண்ணன், எடிட்டிங் சுரேஷ், சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார்.
இன்பினிட் பிலிம் வெஞ்சரஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி..பிரதீப், பங்கஜ் போரா, எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களிலும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.