இந்தி படங்களிலும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் 41 வயதான நடிகை ஸ்வேதா திவாரி. மாடலிங்கிலும் ஸ்வேதா ஈடுபட்டு வருகிறார். பெகுசராய், பர்வரிஷ் போன்ற தொடர்களிலும் ஸ்வேதா நடித்துள்ளார் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ( 2011ம் ஆண்டு) வெற்றியும் பெற்றிருக்கிறர்.
இந்நிலையில்,ரோஹித் ராய், திகங்கனா சூர்யவன்ஷி மற்றும் சௌரப் ராஜ் ஜெயின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “ஷோ ஸ்டாப்பர்” என்ற தனது வலைத் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது ஸ்வேதா திவாரி, நடிகர் சௌரப்பைக் குறிப்பிட்டு நகைச்சுவையாக பேசும்போது “மேரே ப்ரா கி சைஸ் பகவான் லே ரஹே ஹை” என குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது (கடவுள் என் ப்ராவை அளவிடுகிறார்) மகாபாரதம்’ தொலைக்காட்சி தொடரில் கிருஷ்ணராக நடித்த சவுரப் ஜெயின் ‘ப்ரா ஃபிட்டர்’ வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
நடிகையின் பேச்சு குறித்து உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நடிகை பேசியதைக் கேட்டேன், அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறினார்.
இந்நிலையில், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா நடிகையின் கருத்தை விசாரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
It’s too much #ShwetaTiwari
Behad giri hui mansikta 😡 pic.twitter.com/1LiG0csYiF
— Devrat Kumar Mahto (@devratkmr) January 27, 2022