வரவிருக்கிற மாநகராட்சி ,நகராட்சி ,தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது.
இதற்காக அந்த இயக்கத்தினரின் நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் உள்ள இயக்க அலுவலகத்தில் நடந்தது. விஜய்யின் பங்களா அருகில்தான் அலுவலகம் இருக்கிறது. இந்த இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் .விஜய்யின் ஆலோசனைப்படி அனைவர்க்கும் கோழி பிரியாணி விருந்து நடந்தது.
வருகிற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் விஜய்யின் அப்பா எஸ்.ஏ .சந்திரசேகர் விஜய் இயக்கத்தை அரசியல் இயக்கமாக பதிவு செய்திருந்தார். ஆனால் புஸ்ஸி ஆனந்தின் ஆலோசனைப்படி விஜய் தலையிட்டு அப்பாவுக்கு தடை போட்டு வழக்கும் தொடந்தார்.பதிவு செய்யப்பட்டிருந்தால் சின்னம் வழங்கப்பட்டிருக்கும்.ஆனால் அதற்கு வழியில்லாமல் போய் விட்டது. ஆட்டோ சின்னம் கிடைக்காததற்கு இதுவும் காரணம்.
அரசியல் கட்சிகள் செய்யாத கோழி பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தபெருமை புஸ்ஸி ஆனந்துக்கு சேர்ந்திருக்கிறது.அந்த ‘படா கானா’ விருந்து படங்களை பாருங்கள்.!