4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை மேதை இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மும்பை பக்கமாக ஒதுங்கிய சுசி கணேசன் திரும்பி தாயகம் வந்திருக்கிறார். நட்சத்திர ஓட்டலில்தான் பிரஸ் மீட் நடந்தது. அந்த ஓட்டலையும் இடித்து விட்டு பிளாட் கட்டப்போகிறார்களாம்.சரி நம்ம மேட்டருக்கு வருவோம்.
சுவரில் கரிக் கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நினைவிருக்கலாம். அந்த இருவரும் யார் என்ற கேள்வி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அதற்கான விடை இன்று நடந்த பிரஸ்மீட்டில் கிடைத்தது
தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசும்போது “ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் .இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு . எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி கணேசன் இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் . இந்த படத்துக்குகாகவே பிரபலமான டிவியில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான ” வருங்கால சூப்பர் ஹீரோ 2022″ நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்த படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக அறிவிக்கப்பட இருக்கிறார் .”என்றார் .
இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும் , மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போகிற இந்த படத்தில் புதுமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால், ஹீரோ தேடலில் வயது வரம்பு கூட ” 20 லிருந்து 45 வரை ” என அறிவிக்கப்பட்டு இருக்கிறது .
இயக்குனர் சுசி கணேசன் இதுபற்றி கூறும்போது “பலருக்கும் நடிக்கும் ஆசை திறமை இருந்தும் பலர் பல்வேறு காரணங்களால் நடிப்பு கனவை ஒத்திவைத்து வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள் . தோற்றமும், முக பாவனையும் முக்கியான இந்த கதா நாயகன் தேடலுக்கு – வயது வரம்பை உயர்த்தியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்” என்றார்
ஒரு படத்திற்காக டேலண்ட் ஹன்ட் ஷோ நடத்தி ஒரு ஹீரோவை தேர்ந்தெடுப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை .
“அன்றைக்கு அது புதுசாக இருந்தது . கால மாற்றத்திற்கேற்ப இது புதுமையாக இருக்கும் ” என்றார் சுசி கணேசன் .
இந்த நிறுவனத்தின் அடுத்த படம் ராணி வேலுநாச்சியார் .
வாழ்க்கை வரலாற்று படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கியிருக்கின்றன. எழுத்தாளர் மருது மோகனும் , குழுவும் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கும்