“என்னப்பா நம்ம சிவகார்த்திகேயனின் படம் இன்னும் ஒன்னு கூட ரிலீஸ் ஆகலியே ?”என்று கவலைப்பட்ட அவரது ரசிகர்களின் கவலை இன்று காலை 10.10க்கு வெளியிட்டார்கள். இன்று அமாவாசை .நல்ல நேரம் இதுதானோ என்னவோ.!
சிவகார்த்திகேயன் நடிப்பு., இயக்குநர் சிபி சக்கரவர்த்தி . சிவாவுக்கு ஜோடி பிரியங்கா மோகன். டாக்டர் படத்தில் ஜோடி கட்டியவர்தான்.மீண்டும் டானில் இணை சேர்ந்திருக்கிறார் .இசை அனிருத்.
அண்மைக்கால பேமஸ் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்று காலை பத்துமணி பத்து நிமிடத்தின் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்.வெடி போடலாம்.
இந்த அறிவிப்பு வெளியானது முதல் சிவகார்த்திகேயன் இரசிகர்கள் அதனைப் பகிர்ந்து கொண்டாடிவருகிறார்கள்.