பிரபல நடிகர் மோகன் சர்மா ,தற்போது டிவி சீரியல்களிலும் நடிக்கிறார்.இவரை தெரியாதவர்கள் சினிமா உலகத்தில் இருக்கமாட்டார்கள்.
அவரை வீடு புகுந்து இரும்புத்தடி கொண்டு தாக்க முற்பட்டிருக்கிறான் ஒரு ஆள்..அந்த ஆள் குடி போதையில் இருந்திருக்கிறான் .அரசியல் செல்வாக்கு உள்ள ஆள் போலும். இதனால்தான் போன ஆண்டு அதிமுக ஆட்சியில் மார்ச் மாதம் போலீசில் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
“ஆட்சி மாறிவிட்டது.இனியாவது நடவடிக்கை எடுக்கமாட்டார்களா ,என்கிற நம்பிக்கையில் தான் இன்று கமிஷனர் ஆபிசில் புகார் கொடுக்கப் போய்க்கொண்டிருக்கிறேன்” என்று நம்மிடம் சொன்னார் மோகன் சர்மா .
“நல்ல வேளை ,அந்த ரவுடி என்னை இரும்புத்தடி கொண்டு அடிக்கவந்தபோது என்னுடைய மனைவி என்னை காப்பாற்றிவிட்டார் .அந்த ஆள் நல்ல போதையில் இருந்திருக்கிறான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எங்களை காப்பாற்றி விட்டார்கள். என்னுடைய வீட்டு முன்பாக காரை நிறுத்தி பிரச்னை பண்ணுகிறான்.”என்கிறார் மோகன் சர்மா.