மீனாட்சி சவுதரி .இளம் நடிகை. இன்னும் திரையுலக கைகுலுக்கல்களுக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கிறாரோ என்கிற தோற்றத்தில் நடித்துக்கொண்டிருப்பவர் . தற்போது தெலுங்கில் நடித்து வருகிறார் ,அண்மையில் ரவிதேஜாவுக்கு உதடு பொருத்தி முத்தம் கொடுத்திருப்பார்.
“54 வயசு ஆளுக்கு இப்படி ஒரு ஜிவ் முத்தமா ?”என்று அந்த புகைப்படத்தைப்பார்த்து விட்டு பலர் புகைந்து போனார்கள்.
“பண்ணுவமா ,வேணாமா என்கிற செகண்ட் தாட் இல்லாமலேயே ஒப்புக்கொண்ட படம்.எனக்கு அதுதான் ரெண்டாவது படம்! அந்த மாதிரி படம் அமைஞ்சது எனக்கு ராசிதான்!கதிக்கு முக்கியமான கேரக்டரான்னுதான் பார்ப்பேன்.படம் முழுக்க வரணும்கிறது இல்ல.
டைரக்டர் ரமேஷ் வர்மா எனக்கு கதை சொல்லும்போதே அந்த கிஸ்ஸிங் சீன பற்றியும் விவரிச்சிட்டார். ஒரு கமர்சியல் படத்துக்கு அந்த மாதிரி சீன்கள் அவசியம்கிறது எனக்கு தெரியும். அந்த மாதிரி உதடு பொருத்தி முத்தம் கொடுக்கிறது எனக்கு பிரச்னை இல்லை!”என்கிறார் மீனாட்சி சவுதரி .
நம்ம கோலிவுட் தயாரிப்பாளர்கள் டைரக்டர்களுக்கு இது நல்ல செய்திதான்.!