‘சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
மகான் = தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா..இல்லையா என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக ‘மகான்’ உருவாகியிருக்கிறது. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை.