நடிகை ரேவதி 80 மற்றும் 90 களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகி நடிகையாக வலம் வந்தவர்.
தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த், மோகன் என முன்னணி கதாநாயக நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்
மேலும் திரையுலகில் நடிப்பைத் தாண்டி, இயக்குனர், டப்பிங் கலைஞர் மற்றும் பின்னணி பாடகியாகவும் தனெக்கென தனியிடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்சாரக்கனவு, வேலை இல்லா பட்டதாரி-2 போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள பாலிவுட் நடிகை கஜோல், நடிகை ரேவதியுடன் அமர்ந்து இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்து,, “ரேவதி இயக்கும் எனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி .. உடனடியாக என்னை ஆம் என்று சொல்ல வைக்கும் ஒரு இதயப்பூர்வமான கதை!” என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் ரேவதி இயக்கத்தில் கதையின் நாயகியாக கஜோல் நடிக்கும்
இப் படத்திற்கு ‘சலாம் வெங்கி’ என பெயரிடப்பட்டுள்ளது. சமீர் அரோராவால் எழுதப்பட்ட இந்த படம், ஒரு உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.