தலைவி பட நாயகி கங்கனா ரனாவத். ஜெயலலிதாவாக நடித்தவர் .மறந்திருக்கமாட்டீர்கள்.
அடுத்தவர்க்கு அறிவுரைகள் பகர்வதில் ,பகிர்வதில் பக்கா கில்லாடி. அவ்வப்போது அரசியலும் வரும். பிரதமரின் ரசிகை.
அண்மையில் தீபிகா படுகோனே நடித்திருந்த ‘கெஹரியான்’ என்கிற படம் வெளியாகி இருக்கிறது. கவர்ச்சி படு தூக்கலாக இருப்பதாக விமர்சகர்கள் சொல்லுகிறார்கள். படத்தின் நாயகனுடன் தீபிகா ‘லிப்’லாக்’ செய்து நடித்திருப்பதை கணவர் ரன்வீர் சிங் ‘அபாரம் அற்புதம்’என பாராட்டிவிட்டார், என்கிறபோது வேறு எவர் குறை சொன்னாலும் ,குற்றம் பார்த்தாலும் தீபிகா கண்டு கொள்ளப் போவதில்லை.அது சரி, பல்லின் கடி, பட்டவனுக்குத்தானே தெரியும் வலி.!
ஆனால் தலைவி கங்கனா விடுவதாக இல்லை. பொசுக்கென சொல்லிவிட்டார் “போர்னோகிராபி மாதிரி இருக்கிறது.கதையில் ஆழமில்லை” என்பதாக .!
“நான் இந்த நூற்றாண்டின் இளம் வயதுப் பெண்களில் ஒருவள் . இந்த புதுயுக பெண்கள் என்கிற பெயரில் மட்டமான படங்களை வெளியிடாதீர்கள். உடலைக் காட்டும் ,ஆபாசப்படங்களை காட்டுவதினால் மட்டமான படங்கள் காப்பாற்றப் படுவதில்லை. புரிந்து கொள்ளுங்கள்”என்று கண்டித்திருக்கிறார்.
இந்த அம்மாவின் படங்களை பார்த்தவர்கள் யாரேனும் இப்படி கண்டித்திருப்பார்களா ?