தமிழ்ச்சினிமாவின் கலைக் குடும்பத்திலிருந்து புதிய வரவு!
ஏ எல் அழகப்பன் குடும்பத்து வாரிசுகள் நடிகர் உதயா,இயக்குநர் விஜய். இவர்களின் சகோதரியின் மகன் ஹமரேஷ் ( சூப்பர் தமிழ்ப் பெயராக இருக்குல்ல !) .இவர்தான் நாயகனாக அரங்கேறுகிறார்.
கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே..பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கிற படம் ”ரங்கோலி”.
இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் ”ரங்கோலி” திரைப்படம் வழக்கமான பூஜையுடன் தொடங்கப்பட்டது. .
மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
இசை- கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு- மருதநாயகம். மக்கள் தொடர்பு – சதீஷ்