சிலருக்கு சில கேரக்டர்கள் அவர்களுடன் கொண்டாடப்படுவது உண்டு .ஒரு காலத்தில் கிராம ராஜன் என்று நடிகர் ராமராஜன் கொண்டாடப்படவில்லையா?
அதைப்போல கிராமியம் சார்ந்த படங்களில் தற்போது சசிகுமார் பாராட்டப்படுகிறார். அவரது வசன உச்சரிப்பும் உடல் மொழியும் இணைந்து வெளிப்படும்.நகைச்சுவையும் கலந்திருக்கும்.நக்கல் சுவை கூட்டும்.இந்த வகைப்படங்களையே வர்த்தகமம் விரும்புகிறது.
சசிகுமார் , கிராமப்புற கதைகளின் வெற்றி முகத்துக்கு சொந்தக்காரராக மாறிவிட்டார். அத்தகைய படங்களின் வாயிலாக, பல இயக்குநர்களின் வெற்றிப்பயணத்திற்கு ஒரு படிக்கட்டாகவும் அவர் இருந்துள்ளார்.
ஒரு இயக்குநரின் கதையையும், அவரது திறனையும் மதிப்பிடுவதில் அவர் கில்லாடியாக இருப்பது, தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. தயாரிப்பாளர் இ .மோகனின் அடுத்த படத்தை தங்கம்.பா.சரவணன் இயக்குகிறார்.சசிகுமார்தான் நாயகன், பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு நடக்கிறது ,நாயகியாக நடிப்பதற்கு.!
தொழில்நுட்பக் குழுவில் சாம் சி.எஸ்.. (இசை), ராமி (ஒளிப்பதிவு), ஷான் லோகேஷ் (எடிட்டர்), வைரபாலன் (கலை), விக்கி (ஸ்டண்ட் இயக்குனர்), ரமேஷ் (காஸ்ட்யூமர்), தினகரன் (மேக்கப்மேன்), குமரேசன் (ஸ்டில்ஸ்), சந்திரன் ( ஸ்டோரி போர்டு),பி.. பாலகோபி (எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்) கொளஞ்சி (புராஜக்ட் டிசைனர்) .முரளிதரன் – (புரடக்சன் கண்ட்ரோலர்) சுரேஷ் சந்திரா , ரேகா (மக்கள் தொடர்பு) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ் மோகன், அபிராமி ராகுல் பவணன்,ஜி.எம்.. சுந்தர், ஜோ மல்லூரி, தயானந்த் ரெட்டி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.