நம்ம இந்திய திருநாட்டினிலே ‘காஸ்டலியான’ டைரக்டர்னா அது நம்ம ஊரு ஷங்கர்தான்.!
சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து ‘பாக்ஸ் ஆபீஸ்’ ஹிட் அடிக்கிறதில் நம்ம ஆளு கில்லாடி .
இவர் இப்ப டேரா போட்டிருப்பது ஆந்திராவில்.! ராம் சரணின் ‘ஆர்.சி.15 ‘ படத்தை முடிக்காமல் எந்த தமிழ்ப்படத்தையும் இவர் தொடப்போவதில்லை.
கலங்கிப்போய் இருக்கு லைகா ! “கமல் சார் விக்ரம் முடிச்சிட்டு ரெடியா இருக்கார் .ஆனா டைரக்டர் ஷங்கர் இல்லாம எப்படி ‘இந்தியன் 2’ வை தொட முடியும்? அதுக்குள்ள கமல் சார் வேற படத்துக்குப்போயிடுவாரே ! ( போயிடுவார் என்ன ,போயிட்டார்.! )
ஷங்கரும் ராம்சரணின் பிரமாண்டமான பைட் சீனை எடுத்திட்டார்.
நடிகர்கள் கூட்டம்.ஜனக்கூட்டம்னு அந்த ஸ்டண்ட் காட்சிகள் இந்திய அளவில் பேசப்படும் என்கிறார்கள்.
விவரம் தெரிஞ்சவர்கள் இருந்தால் இதற்கு முன்னாடி எந்த படமாவது ஒரு சண்டைக் காட்சிக்காக 10 கோடி செலவு பண்ணி இருக்காங்களா ?
நம்ம ஷங்கர் சார் இந்த படத்துக்கு பத்துக்கோடி செலவு பண்ணிருக்காரே!இந்திய ரசிகர்கள் அசந்து போய் நிக்கப்போறாங்களாம்.
பெரிய ஆளான தில் ராஜுதான் தயாரிப்பாளர். கார்த்திக் சுப்பராஜ் கதை.அப்புறம் என்ன எடுத்து இறைக்கவேண்டியதுதான்!