எப்போதுமே வாக்களிப்பதில் முன்னுரிமை காட்டுகிற சூப்பர் ஸ்டார் ரஜினி ,அஜித் ஆகிய இருவரும் நடந்தும் முடிந்த மாநகராட்சி தேர்தலில் வாக்குப்போடவில்லை.
ஜனநாயக கடமை ஆற்றுவதில் முன்னிலையில் இருப்பவர்களில் இந்த இருவருமே முக்கியமானவர்கள் .
ஆனால் இந்த தடவை ஏன் வாக்களிக்கவில்லை?
விசாரித்தோம்.
அஜித்குமார் சென்னையில் இல்லை.மும்பையில் வலிமை படம் தொடர்பான முக்கிய வேலைகளில் இருந்தார்.அதனால் அவரால் வாக்களிக்கவில்லை.
சூப்பர் ஸ்டாரின் நிலை என்ன?
அவர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்தார் .டாக்டர்கள் அவரை வெளியில் செல்வதற்கு அனுமதிக்க வில்லை என்கிறார்கள். மேலும் உடனடியாக அவர் அமெரிக்க செல்லவேண்டும் என்று அட்வைஸ் பண்ணியதாகவும் தகவல் கிடைத்தது.அதற்கான வேளைகளில் தற்போது அவரது குடும்பத்தினர் ஈடுபட்டிருக்கிற நிலையில் வாக்கு சாவடிக்கு அவரை அழைத்து செல்ல விரும்பவில்லையாம்.
மருமகன் தனுஷ் -மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரின் மன முறிவும் ,இதனால் 18 ஆண்டுகால மண வாழ்க்கைக்கு பாதகம் ஏற்பட்டிருப்பது ,அதன் தொடர்பாக நடந்து விட்ட சில நிகழ்வுகள் அவரை மிகவும் பாதித்து விட்டதாக சொல்லுகிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.அவை பொய்யாக வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை.!