தெலுங்கு திரையுலகில் சமந்தாவின் காதல் செய்தி தான் தற்போது டாப் ! தெலுங்கானா ஊடகங்கள் சமந்தா-நாகசைதன்யா காதல் செய்திகளுக்கே முன்னுரிமை அளித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது நாகார்ஜுனாவின் முதல் மனைவியும் னாக சைதன்யாவின் அம்மாவுமான லட்சுமியை அவரது வீட்டில் போய் சந்தித்து பேசியதை அங்கு தலைப்பு செய்தியாக்கி உள்ளது அங்குள்ள மீடியாக்கள் . நாக சைதன்யாவின் அம்மா லட்சுமி, சமந்தாவின் வீட்டிற்கு சென்று ஒரு நாள் முழுவதும் சமந்தாவுடன் இருந்துள்ளார். சமந்தாவிடம் பேசிய லட்சுமிக்கு மருமகளின் நடவடிக்கைகள் பிடித்துப் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இருவரின் திருமண செய்தி விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.