பிரபல திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் மற்றும் திரையரங்கு அதிபர் அன்புச்செழியன் மகளும் இளம் தொழில் முனைவோர்: கோபுரம் சினிமாஸ் உரிமையாளர் சுஷ்மிதா மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனரும்,சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனருமான ராஜேந்திரன் ஐ ஏ எஸ்-ன் மகனும், சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநருமான சரண் ஆகியோரது திருமணம் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் வெகு விமரிசையாக நடந்தது.
இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த்,மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, போனிகபூர்,தேனாண்டாள் முரளி,எல்ரெட் குமார், இயக்குனர் வெங்கட் பிரபு லிங்குசாமி,நடிகர் பிரபு குடும்பத்தினர்,விஜய் ஆன்டனி, மனோபாலா, செந்தில், எஸ்.வி.சேகர், நாசர், வைபவ் விநியோகஸ்தர் அருள்பதி,தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு,ராணிப்பேட்டை காந்தி,கு.பிச்சாண்டி,தங்கம் தென்னரசு, பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.