அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய படம்,வலிமை இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், வரும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, 4 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் நாயகி ஹூமா குரேஷி, தன் திரையுலக அனுபவம் மற்றும் வலிமை படப்பிடிப்பு அனுபவம் குறித்து கூறுகையில்,”“நான் டெல்லியில் உள்ள நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவள். எனவே எனக்கு கிடைத்த வாய்ப்புளுக்கு நான் மிகவும் பாக்கியம் செய்தவளாக உணர்கிறேன்.
என் தந்தை ரெஸ்டாரண்ட் வியாபாரம் செய்ய, அம்மா இல்லத்தரசி. நடிகையாக வேண்டும் என்பது எனக்கெல்லாம் ஒரு கனவாக இருந்தது. இன்று எனக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால், அது கடவுளின் ஆசீர்வாதம் தானே தவிர வேறொன்றும் இல்லை.
பில்லா-2 படத்தின் போதே நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அது நடக்காமல் போய்விட்டது அது எனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது.எப்படியும் அஜித்துடன் நடித்து விட வேண்டும் என்பதும் எனது கனவுகளில் ஒன்றாக இருந்தது.நம்பிக்கையுடன் காத்திருந்த எனக்கு தற்போது இயக்குனர் எச். வினோத் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
வினோத் வலிமை திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது எனக்கு மிக சுவாரசியமாக இருந்தது.அப்போதே இப்படம் பேசப்படும் படமாக அமையும் என நம்பினேன்.:இப்படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். எனக்கு பைக் சாகசம் மிகவும் பிடிக்கும்,
இப் படத்தில் இடம்பெறும் பல பைக் சாகச காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும். தமிழில் வசனங்களை புரிந்து கொண்டு பேசுவதற்கு இயக்குனர் வினோத் எனக்கு பெரிதும் உதவினார்.ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கேட்கும் போது கோபப்படாமல் அவர் எனக்கு விளக்கினார்.அதேபோல் படப்பிடிப்பு தளத்திலும் அஜித் எனக்கு உதவினார். அதனால் தான் முதல்நாள் படப்பிடிப்பிலேயே அவருடன் நடிப்பது சுலபமாக இருந்தது. ஆனால் அஜித்துடன் இணைந்து நடிக்கும் எனது ஆசை நிறைவேறி விட்டாலும் அவருடன் இந்த படத்தில் டூயட் பாடாதது பெரிய வருத்தமாக இருக்கிறது.
தமிழில் ரஜினியுடன் நடித்த காலா படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான். வாய்ப்பு கிடைத்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.. தமிழில் நடிக்க எனக்கு மொழி ஒரு தடையாக இல்லை. நடிப்புக்கு மொழி ஒரு தடையே இல்லை. என்கிறார்.