இன்று இந்தியாவை கிறங்கடிக்கிற நடிகை ராஷ்மிகா மந்தனா .புஷ்பா படத்தின் “சாமி “பாட்டு சூப்பர் ஹிட் என்பதால் பெயரும் புகழும் உச்சத்தில் இருக்கிறது.
இதனால் பாலிவுட் வட்டாரம் ஹேஷ்யம் சொல்லத் தொடங்கியிருக்கிறது.
இவருக்கும் நடிகர் விஜய தேவரகொண்டாவுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடந்து விடும் என்பதாக கணித்திருக்கிறார்கள். கீதா கோவிந்தம் ,டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இந்த ஜோடியினர் நெருக்கம் காட்டி நடித்திருந்தனர். படங்களும் ஹிட். இதன் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவுடன் ராஷ்மிகா நெருக்கம் காட்டத்தொடங்கி விட்டார் .இதனால் வாழ்க்கையிலும் ஜோடி சேரவேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
இதை வைத்துக் கொண்டு மும்பை வட்டாரம் கணித்திருக்கிறது. நல்லது நடந்தால் சரி !