பிக்பாஸிலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் விலகிய பின்னர் பலவித குடுகுடுப்பைகள் உடுக்கை ஜோதிடம் சொல்லி வருகிறார்கள்.
உண்மை நிலை என்ன?
ஓடிடி பிக்பாஸுக்கு மக்களிடம் அவ்வளவு ஆதரவு கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.!இந்திய அளவில் ரீச் ஆகவில்லை.
ஆனால் அதைவிட பெரிய உண்மை ,டிஸ்னி ஹாட் ஸ்டாரின் பிக்பாஸ் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிற விக்ரம் படத்துக்கு இடையூறாகி இருப்பதுதான்.!
14 நாட்கள் போல்ட் கேமராவினால் படமாக்கப்பட்ட விக்ரமின் கிளைமாக்ஸ் வேலைகளுக்கு இடையூறாக இருக்கும் என்கிற அச்சம் தான்!
அந்த காட்சிகளுக்கு வெளிநாட்டில் சி.ஜி .ஒர்க்ஸ் செய்யப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு கமல்ஹாசன் உடன் இருந்தாக வேண்டும். இங்கே பிக்பாஸில் கவனம் செலுத்துவாரேயானால் விக்ரம் ,மற்றும் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் பாதிக்கப்படலாம் .எனவே பிக்பாசில் இருந்து உலக நாயகன் வெளியேறி விட்டார்.
வெளிநாட்டில் விக்ரம் பட வேலைகளை பார்ப்பதுடன் உலக ஆடைகள் காட்சியில் கதர் ஆடைகளை அறிமுகப்படுத்துகிற விழாவில் உலகநாயகன் கலந்து கொள்ள வேண்டியதிருக்கிறது என்பது இன்னொரு காரணம்.
சரி,அவருக்குப் பதிலாக பிக்பாஸை தொகுத்து வழங்கப்போவது யார்.?
ஸ்டார் விஜய்க்கு நெருக்கத்தில் இருக்கிற சிலம்பரசன் கலந்து கொண்டால் இவருக்கு பலமாக இருக்கிற ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
இவரைத்தவிர அரவிந்த்சாமியின் பெயரும் அடிபடுகிறது.
.