தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நாயகியாக திகழ்பவர் நடிகை நயன்தாரா! நடிகர்கள் சிம்பு,பிரபுதேவா ஆகியோரது காதல் முறிவுக்கு பின் ,ஒரு காலத்தில் சிம்பு-நயன்தாராவின் காதலுக்கு தூதாய் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை தற்போது காதலித்து வருவதாகவும் இருவரும் ஒன்றாகவே குடித்தனம் நடத்தி வருவதாகவும் கோலிவுட்டில் தகவல்கள் வெளியானது இருவரும் தங்கள் காதல் பற்றி பேசாமல் மொவுனம் சாதித்து வருவதோடு அது எங்கள் பர்சனல் விஷயம் என தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சமீபத்தில் தன கையில் பச்சை குத்தியிருந்த பிரபுதேவாவின் பெயரை நவீன லேசர் சிகிச்சை யின் மூலம் அகற்றியுள்ளார். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனை பிரிந்ததாக முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.ஆனால், இதுக்கெல்லாம் அசராத நயன்தாரா, நேற்று நடந்த பிலிம்பேர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற பின் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் ஒரு புகைப்படத்தை எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதன் மூலம் தாங்கள் பிரிந்ததாக எண்ணிய அனைவருக்கும் நயன்தாரா ஒரே புகைப்படத்தின் மூலம் பதில் அளித்து விட்டார்.