ஒரு காலத்தில் ஓகோவென கொடி கட்டி வாழ்ந்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக் .அற்புதமான நடிகர்.இவரது வளர்ச்சி தென் தமிழகத்தில் முக்குலத்தோர் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.தங்களுக்கு திரையுலகம் சார்ந்த தலைவன் கிடைத்து விட்டதாக நம்பினார்கள்.
ஆனால் இந்த நம்பிக்கையை நாசமாக்கியது அதிமுக போன்ற அரசியல் கட்சிகள்தான்.!தேர்தல் காலத்தில் கார்த்திக்கை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் வளர்ந்தார்கள் தவிர கார்த்திக்கை வளரவிடவில்லை.இதுவே அரசியலில் மிகப் பெரிய சரிவை அவருக்கு ஏற்படுத்தியது.இதன் பின்னர் வேறு பல காரணங்களால் அவர் ஒதுங்கி நிற்கவேண்டிய சூழல்.
மகன் கவுதம் கார்த்திக்கின் திரை பிரவேசத்துக்கு அவர் துணையாக இருந்தாலும் ,கிடைத்த முக்கிய வேடங்களில் முத்திரை பதித்தார்.
மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நவரசநாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன் ,ஸ்ரீதர்,ஹேமந்த்மேனன்,அபிதா,அஸ்மிதா,யுவராணி,தீபிகா,சிங்கம்புலி,ஜான்விஜய்,சரவண சக்தி,இளவரசு,ஆகியோர் நடித்த இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கி இருக்கிறது.ராதாரவி டப்பிங்கை இன்று முடித்திருக்கிறார்.படத்தின் பெயர் ‘தீ இவன்’ !!
இப்படத்தின் பாடல்களை புஷ்பா படத்தில் சாமி பாடலை பாடிய பிரபல கிராமிய பாடகி ராஜலட்சுமி,, தனி ஒருவன் படத்தில் கண்ணாளா கண்ணாளா … பாடலை பாடிய பத்மலதா என பல்வேறு பிரபல பாடகர்கள் பாடி உள்ளார்கள்.
ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகியபடங்களை தயாரித்து இயக்கியடி.எம் . ஜெயமுருகன் இப்படத்தின் திரைக் கதை ,பாடல்கள், எழுதி இசை அமைத்து இயக்கி உள்ளார்.
ஒளிப்பதிவு ஒய்.என்.. முரளி, படத்தொகுப்பு இத்ரிஸ், பின்னணி இசை அலிமிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலா ஜெயமுருகன் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.