தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் பி.எஸ்..மித்ரனுடன் முதன்முறையாக இணையும் படம் “சர்தார்”
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
சென்னையை தொடர்ந்து கொடைக்கானல் காட்டுப்பகுதிகளிலும், மைசூர் காட்டுப்பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
இதில், ஸ்டண்ட் காட்சிகளை பிரமாண்ட அளவில் எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார்.
பிரமாண்டமான ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமடைந்துள்ளது.
‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், படம் முடிவடையும் முன்னதாகவே படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றுவிட்டது குறிப்பிடத் தக்கது.
இந்த படத்தில் இரு வேடங்களில் கார்த்தி நடித்து வருகிறார்.
கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார்.மற்றும் சிம்ரன், ஜங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கியபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்..லக்ஷ்மன்குமார் பிரமாண்டமாக ,அதிக பொருட்செலவில் தயாரிதந்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசை , ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், எடிட்டிங் – ரூபன்,
கலை இயக்கம் – கதிர்,
எழுத்து – எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜி, பிபின்ரகு. ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்,
ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா ,
பாடல்கள் – யுகபாரதி, நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, பி.ஆர்.ஓ – ஜான்சன்.