தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க.