இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நாயகனாக வடிவேலு நடிக்க,இதில் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில், சில நாய்களுடன், மிகவும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் வடிவேலு இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் குறித்து , வீடியோ ஒன்றை சந்தோஷ் நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடும் நிலையில், ‘லெஜண்ட் தன்னுடைய இசையால், நம்மை மயக்கப் போகிறார்’ என சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.மேலும், வடிவேலு பாடிக் கொண்டே செய்யும் வேடிக்கையான முக பாவனைகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
View this post on Instagram