உள்ளத்தை அள்ளித்தா ,அரண்மனை,உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் மூன்று மணி நேரம் ஒரு படத்தை குடும்பத்துடன் சென்று ரசித்து ,சிரிக்க வேண்டுமென்றால் அதற்கு சரியான ஆள் சுந்தர்.சி தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் . எம்.எல்.ஏ வாக இருக்கும் விஜயகுமார் ,தன்னை தொடர்ந்து,தன மகன் பிரபுவையும் எம்.எல்.ஏ வாக்க முடிவெடுக்கிறார். ஆனால் தான் காதலித்த பெண்ணை ஊரை விட்டே துரத்திய அப்பாவை வெறுக்கிறார் பிரபு. அதே சமயத்தில், எம்.எல்.ஏ. பதவிக்கு ஆசைப்பட்டு , வீட்டுவேலைக்காரனே பிரபுவின் அப்பா விஜயகுமாரை கொலை செய்து விட்டு ,அந்த கொலைப்பழியை பிரபு மீதுசுமத்துகிறான்.,ஜெயிலில் இருந்து திரும்பிய பிரபு , தன்னுடைய சொத்து எங்கும் போய்விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய மூன்று தங்கைகளுக்கு (ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா) வீட்டோட மாப்பிள்ளைகளாக பார்த்து திருமணம் செய்துவைத்துவிடுகிறார். மொத்த சொத்தையும் அவர்களுக்கே எழுதியும் வைத்துவிடுகிறார். ஆனால், மூன்று தங்கைகளும் ,தன் அப்பாவை கொன்றவர், தங்கள் வாழ்க்கையை கெடுத்தவர் என்று பிரபுவை வீட்டைவிட்டே விரட்டிவிடுகிறார்கள் .ஏற்கெனவே தன் மகன்களான விஷாலையும், வைபவையும் பிரிந்த துன்பத்தோடு, இப்போது தங்கை குடும்பத்தையும் பிரிந்து வாடும் பிரபு, ஒரு கட்டத்தில், தன மகன்கள் விஷால்,வைபவ்,சதீஷ் ஆகியோருடன் இணைகிறார்.அதே சமயம், பிரிந்துள்ள தங்கை குடும்பத்தை யும் தன குடும்பத்துடன் சேர்க்க நினைத்து,
‘ மீண்டும் ஒன்று சேரவேண்டும் என்றால் உங்கள் மூன்று அத்தைகளுக்கும் மூன்று பெண்கள் உள்ளனர்… அவர்களை எப்படியாவது நீங்கள் மூவரும் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று தனது மகன்களுக்கு கட்டளையிடுகிறார் பிரபு. இதை ஏற்றுக்கொண்ட விஷாலும் ,அவரது தம்பிகளும் அங்கு சென்று ,போலீஸ் போல் நடித்து, அந்த குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிப்பதுபோல் உள்ளே நுழைகிறார்கள்.. அந்த சமயம், எம்.எல்.ஏ., தேர்தலும் வருகிறது. இந்த முறை அந்த தேர்தலில் வில்லனை எதிர்த்து ரம்யாகிருஷ்ணன் போட்டியில் குதிக்கிறார்.அவருக்கு பக்கபலமாக விஷால் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் விஷால் உள்பட மூவரும் தன்னுடைய அண்ணனுடைய பசங்க தான் என்று தெரியவர ,இவர்களையும் வீட்டைவிட்டு விரட்டுகிறார் ரம்யாகிருஷ்ணன்.அதன் பின் தேர்தலில் ரம்யா கிருஷ்ணன் ஜெயித்தாரா! பிரபுவை மன்னித்து ஏற்றுக்கொண்டாரா…? விஷால் உள்பட மூவருக்கும் திருமணம் நடந்ததா…. என்பது தான் உச்ச கட்ட காட்சி! அரசியல் கட்சி உள்பட அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் ஆட்களை சப்ளை செய்யும் ஏஜன்ட் ஆக அறிமுகமாகிறார் விஷால். அப்படியே ஹன்சிகாவை பார்த்த தும் காதலிக்கிறார்.. விஷால்-ஹன்சிகா காதலிப்பதும், சந்தானம் போலீஸ் வேலையை பறிக்கொடுப்பதும் முதல் பாதி நேரம் போவதே தெரியாமல் அதிரடி காமெடியாக நகர்கிறது படம். ஆக்சன் ஹீரோவான விஷால் இதில் ,அதிரடி மற்றும் காமெடியில் ‘அதகளம்’ பண்ணியிருக்கிறார்.ஹன்சிகா மாடர்ன் கேர்ளாக வந்து அனைவரின் மனதை கொள்ளையடிக்கிறார். ஹிப் பாப் தமிழாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரமாதம்!, பின்னனி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.சந்தானம் வரும் அத்தனை காட்சிகளும் திரை அரங்கமே குலுங்க குலுங்க சிரிக்கிறது.ஹன்சிகா வெண்ணை போல கவர்ச்சியில் நம்மை வழுக்கி விழச் செய்கிறார்.இவர் வரும் பாடல் காட்சிகள்உள்பட அனைத்தும் ‘ காய கல்ப ‘காட்சிகள் தான் . பூனம் பாஜ்வா ஒரு பாடலுக்கு கிளு கிளுப்பு ஆட்டம் போட்டுள்ளார்.வைபவ், சதீஷ், பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, வில்லன் பிரதீப் ராவத் ஆகியோர் காட்சிகளை நகர்த்துவதற்கு கை கொடுத்திருக்கிறார்கள். விஷால் இரண்டு நிமிடங்கள்(?) மூச்சு விடாமல் ஒரேடேக்கில் பேசும் டயலாக்கும்,’காவி டிரஸ் போட்டவன் எல்லாம் கலர் கலரா பிகரை கரெக்ட் பண்ணும்போது காக்கிச் சட்டை போட்ட நான் கரெக்ட் பண்ணக்கூடாதா?’ என சந்தானம் கேட்கும் இடத்திலும் கைத்தட்டல் அடங்க நேரமாகிறது.விஷா ல்,சந்தானம் இருவரும் படத்தின் வேகத்துக்கு ஆக்சி லேட்டாராக உதவியுள்ளனர்.அரதபழசான கதை என்றாலும் சுந்தர்சியின் திரைக்கதையால் ரசிக்க முடிகிறது.ஆக மொத்தம் லாஜிக்கை பார்க்காமல் ‘ஆம்பளை ‘யை ரசிக்கலாம்.
cinema murasam Rating 3/5