தமிழ்த்திரையுலகில் முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவரான டி.இமான், கடந்த 2008 ம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிகா என்பவரை 2008 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வெரோனிகா டோரத்தி இமான், பிலேசியா காத்தி இமான் என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் இமான் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாகவும்,இருவரும் மனம் ஒத்து பிரிவதாக முடிவெடுத்து, சட்டப்படி விவாகரத்து பெற்றதாகவும் டி இமான் அறிவித்தார்.இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டி இமான் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையை சேர்ந்த உமா என்பவர் தான் டி இமானின் இரண்டாவது மனைவியாகப்போகிறவர்என்றும், இது இரு வீட்டு பெற்றோர் பார்த்து முடிவு செய்துள்ளதாகவும்,இவர்களின் திருமணம் வரும் மே மாதம் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.விரைவில் இது குறித்த அறிவிப்பை டி இமான் வெளியிடுவார் என தெரிகிறது.