வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டிவிட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்வெளியிட்டு இருந்தார்.அதில் கருப்பு வெள்ளைபுகைப்படத்தில்அஜித் தாடி மற்றும் காதில் கடுக்கனுடன் தோற்றமளித்தார்.
சில நாட்களுக்கு முன் நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினர் உடன், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்களிலும் அஜித், காதில் கடுக்கண் & முகத்தில் நீண்ட தாடியுடன் செம ஸ்மார்ட் லுக்கில்காணப்பட்டார்.
இந்நிலையி ல் அஜித் – அடுத்ததாக சூரைப்போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா பிரசாத் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் தீயாக பரவி வரும் நிலையில், இது குறித்து அஜித் ரசிகர் ஒருவர்,டிவிட்டரில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசிடம் கேட்க, சுதா – அஜித் படம் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், அப்படி அந்த படம் எடுத்தால் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும், அந்த படம் நடக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது