ஒடிந்து விழும் தேகம்.ஆனால் உணர்வுகளின் ஊற்று ! மேகமலை காற்று இவரை பட்டம் போல தூக்கிச்சென்றுவிடும்.அந்த அளவுக்கு ‘வெயிட்’டானவர் !
தமிழ்ச்சினிமாவில் இவரது பாணியே வேறு. கருத்துக்களில் சமரசம் செய்து கொள்ளமாட்டார். ஆன்மீகவாதியா,நாத்திகமா எதில் இவர் சேர்த்தி?இனம் கண்டு சொல்ல முடியவில்லை. ஆனால் கழுத்தில் நிறைய உருத்திராட்சங்கள்,வகை,வகையாக.!
இவரும் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டார். வாழ்க்கை கசந்து விட்டதா?
என்னமோ தெரியவில்லை தமிழ்ச்சினிமாவில் இது மண முறிவு காலம் போலிருக்கிறது.
சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து என்பது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்தாண்டு நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து இயக்குனர் டி.இமான் தனது விவாகரத்து முடிவை அறிவித்தார்.
இவ் வருட தொடக்கத்தில் நடிகர் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திருமண முறிவை அறிவித்தனர். இந்நிலையில் தற்போது பாலாவும் அந்த பட்டியலில் இணைந்து இருக்கிறார்.
இயக்குநர் பாலா, கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிரார்த்தனா என்கிற மகள் உள்ளார்.கணவனும் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாகவே மனதளவில் பிரிந்து வாழந்து வந்துள்ளனர்.
இந்நிலையில்,18 வருடங்கள் வாழ்ந்து வாழ்ந்து வந்த பாலா – முத்துமலர், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.இவருடைய விவாகரத்து தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை கொண்டுள்ள இயக்குநர் பாலா,.மறைந்த இயக்குநர் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் .
கடந்த 1999-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற பாலா, அடுத்தடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.
தற்போது ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் படத்தை தயாரித்துள்ளார். இதையடுத்து நடிகர் சூர்யா நடிக்கும்இன்னும் பெயரிடப்படாத படத்தையும் இயக்கி வருகிறார் . தமிழ்ச் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணியில் இருந்து வருகிற பாலா, தற்போது தனது மனைவி முத்துமலரை விவாகரத்து பெற்று பிரிந்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.