“நம்ம திறமையைக் காட்ட பாலிவுட்தான் போகணும்கிற அவசியமே இல்லை. நம்ம படங்கள் வழியாக நம்மை பற்றி,நமது ஆற்றலைப் போற்றி பாலிவுட்டை பேச வைக்க முடியும்கிறபோது அங்க நாம் ஏன் போகணும்?”
இப்படி கேட்டது வேறு யாருமல்லர். நம்ம சூர்யா சிவகுமார்தான்!
“ஆல் இந்தியா ஆக்டர் ஆவதற்கு பாலிவுட்தான் வாசலா ?”என்று கேட்டதற்கு சூர்யா சொன்ன நெத்தியடி பதில்தான் முதல் பாராவில் நீங்கள் படித்தது.
அவரது ‘எதற்கும் துணிந்தவன்’படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலை வாரி குவித்துக்கொண்டிருக்கிறது.
சினிமா பற்றிய புரிதல் சிவகுமாரின் மைந்தர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. கோடிகளை வாங்கி குவிப்பது மட்டுமே நோக்கமில்லாது மக்களுக்கும் அது போய் சேரவேண்டும் என்கிற மனம் ,செயலாற்றல் சூர்யா சகோதரர்களுக்கு மட்டுமே இருக்கிறது.
பெண்கள் தினம் பற்றிய ஒரு கேள்விக்கு சூர்யா சொன்ன பதில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
“நமது வீட்டுக்கு விருந்தினர் யாராவது வந்தால் ,அவர்களுக்கு காப்பி ,சிற்றுண்டி கொடுப்பதற்கு மகளை ,அல்லது வீட்டுப்பெண்களைத் தானே கூப்பிடுகிறோம்? மகனை அழைப்பதில்லையே ,ஏன் ?மாறுதல் நம்மிடம் இருந்துதான் வரவேண்டும்! “என்கிறார்.
எஸ்.!ஹோட்டல்களில் ஆண்கள் பரிமாறுகிறது போது வீடுகளில் மட்டும் ஏன் ஆண்களை உபசரிக்க விடுவதில்லை.!