மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் படநிறுவனம் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் “ வீரசிவாஜி “ படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தோடு விஷால், வடிவேலு, தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் “ கத்திச்சண்டை “ படத்தையும் தயாரித்து வருகிறது. வீரசிவாஜி படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். இவர்களுடன், ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். இப் படம்குறித்து இயக்குனர் கணேஷ் விநாயக் கூறியதாவது… படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைய உள்ளது. இந்த படத்தின் டீசரை வெளியிட்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘இப்படம் நிச்சயமாக வெற்றியடையும் அது இந்த டீசரை பார்த்தாலே தெரிகிறது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பாராட்டினார். அவர் பாராட்டியது போல படம் நிச்சயம் வெற்றியடையும். சமீபத்தில் இந்த படத்திற்காக யுகபாரதி எழுதி D.இமான் இசையமைத்து ஸ்ரேயா கோஷல் – ஸ்ரீராம் பார்த்தசாரதி குரல்களில் உருவான“ அடடா அடடா என் தேவதையே,இது நாள் வரையில் என் விழிகள் தேடலையே “ என்ற பாடல் காட்சி தினேஷ் மாஸ்டர் நடன அமைப்பில், எம்.சுகுமார் ஒளிப்பதிவில் , விக்ரம் பிரபு – ஷாம்லி நடனமாட, ஜார்ஜியா நாட்டில் கஸ்பகி என்ற இடத்தில் படமாக்கினோம். அந்த பாடல் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. விரைவில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை,எம்.சுகுமார் கவனிக்க,டி இமான் இசையமைத்து வருகிறார்.