அமரர் கல்கியின் அமர காவியமான ‘பொன்னியின் செல்வன் ‘ படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் இன்னும் பேட்ச் ஒர்க் வேலைகள் முழுமை பெறவில்லை.
அதற்காக கார்த்தியும் ஜெயம் ரவியும் மும்பை சென்றிருக்கிறார்கள்.
கப்பலில் இருந்து வந்தியத்தேவன் கடலில் குதித்து தப்புவது போன்ற காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த காவியத்தை லைகா ,மணிரத்னம் இணைந்து தயாரிக்கிறார்கள்.
அமரர் எம்.ஜி.ராமச்சந்திரன் ,உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் எடுக்க முயன்று முடியாமல் போன கல்கியின் நாவல்தான் பொன்னியின் செல்வன். அதிக உழைப்பு,முயற்சி ,பொருள் தேவைப்படுகிற அற்புதமான நாவலை மணிரத்னம் இயக்கியிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை கடுமையாக விமர்சித்தவர்( ஜெயமோகன்.) வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மற்றும் இந்த படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி ,சரத்குமார்,பிரகாஷ் ராஜ்,மற்றும் ஐஸ்வர்யாராய் பச்சன்,திரிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இசை.
இந்த ஆண்டு செப்டம்பர் 30.ம் தேதி வெளியாகிறது.