சேது படத்தின் மூலமாக இயக்குனர் பாலாவால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம். 50 வயது எட்டியும் இன்றும் இளமையாக உள்ள நடிகர்களில் ஒருவராக உள்ளார்,தற்போது நயன்தாராவுடன் இருமுகன் படத்துக்காக டூயட் பாடி வருகிறார். இவருக்கு அக்ஷிதா என்ற மகளும், துருவா என்ற மகனும் உள்ளார்கள்.இதில் அக்ஷிதாவிற்கு அடுத்த மாதம்10-ந்தேதி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நிச்சயத்தார்த்தம் நடக்கவுள்ளதாம்,மணமகன் மானு ரஞ்சித். தொழிலதிபர் ரங்கநாதன் (சி.கே. பேக்கரி ) மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்துள்ளாராம் விக்ரம்.அதுத வருடம் திருமணம் நடக்கவுள்ளதாம்.அதற்கான வேலைகள் தற்போது பிஸியாக நடந்து வருவதாக கூறப்படுகின்றது. விக்ரம் மகன் துருவா விரைவில் பிரமாண்ட இயக்குனரின் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.