நாலைந்து மாநிலங்களில் ஓடக்கூடிய படங்கள் என்றால் அதற்கு தயாரிப்பாளர்கள் பெருமையுடன் சொல்லிக்கொள்ளுவது இது ‘பான் இந்தியா ‘படம்.!
எதோ ஏர்லைன்ஸ் பெயர் மாதிரி இருக்குல்ல.?
இந்த மாதிரியாக பெயரிட்டு சொல்வது துல்கர் சல்மானுக்கு பிடிக்கவில்லை. “அது என்னய்யா ‘பான் இந்தியா?”என்கிறார் மம்முட்டியின் மகன்.
தமிழகத்திலும் இவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.தற்போது பாலிவுட்டுக்கு போகிறார்.
ஏன் அப்படி சொல்லக்கூடாது?
இதோ அவர் சொல்லுகிற காரணம்.
“எரிச்சலாக இருக்கு பிரதர்.!அந்த வார்த்தையைக் கேட்கக் கூட பிடிக்கல. நாம் அனைவரும் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள். ( ஓஒ ..மோடி சொல்லுகிற ஒரே இந்தியா சங்கதி மாதிரி தெரியுதுல்ல.) பல மொழிகளை சேர்ந்த நடிகர்கள் இருக்கிறார்கள்.எல்லா மொழிகளிலும் அவரவர் திறமையைக் காட்டட்டும்.பறிமாறிக்கொள்ளட்டும் .ஆனால் நாம் ஒரே நாட்டைச்சேர்ந்தவர்கள்.
அமெரிக்கத்திரைப்படங்களை அவர்கள் எப்போதாவது பான் அமேரிக்கா என்று சொல்கிறார்களா? இந்தியப்படங்களை மட்டும் ஏன் பான் இந்தியப்படங்கள் என்று சொல்லவேண்டும்?புரியல.!
இந்தியா முழுவதும் எடுக்கப்படும் படங்கள் எல்லா மொழிகளுக்குமான படமாக இருக்க முடியாது. எதோ ஒரு மார்க்கெட்டை குறிவைத்து தான் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை அனைத்து கலாசாரங்களையும் கொண்ட படமாக எடுக்க முடியாது” என்று அழுத்தம் கொடுத்து சொன்னார்.