உக்ரைன் என்கிற பெயரைக்கேட்டால் உலகமே அதிருது !
ஆனால் உக்ரைன் நடிகை ஜோடி என்றால் சிவகார்த்திகேயனுக்கு ஜில் ஜில் ஜிகர்தண்டா சாப்பிட்ட மாதிரி சிலுக்கிது.!
அனுதீப் கே.வி.என்கிற தெலுங்கு இயக்குநர் நம்ம சிவகார்த்திகேயனின் 20 வது படத்தை இயக்கப்போகிறார்.
இதில் என்ன விஷேசம் என்றால் நம்மாளுக்கு ஜோடி உக்ரைன் நடிகை மரிய ரியபோஷப்கா .நாக்கு சுழுக்கிடுச்சு ராஜா !
கதை பாண்டிச்சேரியில் தொடங்குது.அப்படியே லண்டனுக்கு பறக்குது. அதனால் இந்த நாயகி கேரக்டருக்கு உக்ரைன் நடிகைதான் பொருத்தம் என தீர்மானித்திருக்கிறார்கள். தமன் இசை .தமிழ் தெலுங்கு என இரட்டை மொழிப்படம் .!