APPA-TAMIL MOVIE.
Cast: Thambi Ramaiah.RATING:4/5.
வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டமூன்று விதமான அப்பாகள்! அவர்கள் எப்படி தங்களது பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பதுதான் ‘அப்பா’வின் ஒரு வரி கதை!சமுத்திரகனி!,தன் மகனிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை அறிந்து அவன் விருப்படியே மகனை வளர்க்கும் ஒரு அப்பா!. தம்பி ராமையா!; மாநிலத்திலேயே அதிக மார்க் எடுத்து அமெரிக்காவில் பெரிய டாக்டராக வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் தன் விருப்பப் படி மகனை வளர்க்கும் இன்னொரு அப்பா!.நமோ நாராயணன்!,இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிறனும்டா, நமக்கு எதுக்கு ஊர்வம்பு! என்ற கொள்கையில் மகனை வளர்க்கும் இன்னொரு அப்பா! இவர்களில் சிறந்த அப்பா யார்? என்பதை பெற்றோர்களுக்கு ஓங்கி உச்சந்தலையில் நறுக் என குட்டு வைக்கும் அருமையான திரைப்படமே ‘அப்பா’.குழந்தைகள் மீது தங்களது ஆசைகளை திணிப்பதாலும் ஏற்படும் விளைவுகளை யதார்த்தமான காட்சிப் பதிவுகளாக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி!
தம்பி ராமையா, “மிஸ்டர் சக்கரவர்த்தி சிங்கப்பெருமாள்” என தன் மகனை கம்பீரமாக பெயர் சொல்லி அழைப்பதாகட்டும்,. படிப்பு விஷயத்தில் அவன் விருப்பம் என்னவென கேட்காமலேயே ஆட்டிப் படைக்கும் ஒரு எரிச்சல் ஊட்டும் அப்பாவாகட்டும், கடைசியில் மகனை நினைத்து மருகுவதும் ,உருகுவதும் தம்பி ராமையா.
ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் தன்னை இகழ்ச்சியாக நினைத்து விடக்கூடாது . அவர்கள் வீட்டுக் குழந்தைகள் போலவே ஆங்கில பள்ளியில்தான் தன் மகனும் படிக்க வேண்டும் என்ற முரட்டு, வறட்டு கௌரவத்துடன் கணவனிடம் சண்டையிட்டு,காரியம் சாதிப்பதற்காக தன் கையை அறுத்து கொண்டு,நிலைகுலைய வைத்து, தன்னை பிரிந்து சென்ற தன் மனைவிக்கு முன், மகனை கின்னஸ் சாதனையாளராக்கி காட்டும் சமுத்திரகனி, பொறுப்புள்ள ஒரு அப்பாவாக வாழ்ந்துள்ளார். தவறான முடிவு எடுக்கும் மனைவியை அனுசரித்து செல்வதாகட்டும், காணாமல் போன மகனை தேடி அலையும்போதும் துடிக்கும் துடிப்பில் சமுத்திரக்கனி மனதில் பச்சக் என பதிந்து விடுகிறார்.ஒரு பையனுக்கும், பெண்ணுக்குமான முதல் ஈர்ப்பை புரிந்து கொள்ளாத காரணத்தினால்தான் இங்கே பல கொலைகளும், தற்கொலைகளும் நடக்கின்றன என்பதை (இனக்கவர்ச்சி) ரெண்டுகெட்டான் வயதில் அலைபாயும் மகனை அழைத்து அவன் விரும்பிய பெண்ணை அழைத்து வந்து நேரில் அமர்த்தி பேச வைத்து.. “இவ்வளவு தாண்டா விஷயம். நீங்களே பேசிட்டீங்கன்னா எல்லாமே புரிந்து விடும் ..”என பக்குவமாக சொல்லிப் புரிய வைப்பது மிகவும் அருமை! இதனை எத்தனை பெற்றோர்கள் இனிமேலாவது புரிந்து கொண்டு பின்பற்றுகிறார்கள் என்பதை பார்ப்போம்! மகனின் அருமை, இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே அவனை கவனிக்காமல் விட்டு விட்டோமே! என குற்ற உணர்ச்சிகளை அடக்கி கொண்டு சாதனை படைத்த தன் மகனை கண்டு பெருமைப்படும் நமோ நாராயணன்.கச்சிதம்!தன் கவிதை தொகுப்பை வெளியிடும் நிகழ்ச்சியில் அனைவரையும் கண் கலங்க வைக்கும் சிறுவன் நாசாத்தை யாரும் மறந்து விட முடியாது…நம்பர் ஒன் பெயரெடுத்த பெரிய பள்ளிகளில் கண்டிப்பு என்ற பெயரில் மாணவர்கள் என்ன நிலைமைகளுக்கு எல்லாம் ஆளாக்கபடுகிறார்கள் என்பதை துணிச்சலுடன் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி! இப்படி பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நிறைய படிப்பினை தரும் படமாக அமைந்துள்ளது. ‘பிராஜக்ட்’ என்ற பெயரில் பெற்றோர்களிடம் தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.சமுத்திரக்கனி! சமுத்திரகனியின் உணர்வுபூர்வமான திரைக்கதைக்கு இளையராஜாவின் இசையும், ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும் கை கொடுத்துள்ளன.கெஸ்ட் ரோலில் வரும் சசிகுமார், மற்றும் வேலா ராமமூர்த்தி, விநோதினி, ப்ரீத்தி, திலீபன், ஆதிரா ஆகியோரது நடிப்பும் பாராட்டக்கூடியதே! குறைகள் இருந்தாலும், மொத்தத்தில்.நல்ல கருத்துக்களை நம் முன்வைத்திருக்கும்..இந்த ‘அப்பா’வை அனைவரும் கொண்டாடலாம்!

தம்பி ராமையா, “மிஸ்டர் சக்கரவர்த்தி சிங்கப்பெருமாள்” என தன் மகனை கம்பீரமாக பெயர் சொல்லி அழைப்பதாகட்டும்,. படிப்பு விஷயத்தில் அவன் விருப்பம் என்னவென கேட்காமலேயே ஆட்டிப் படைக்கும் ஒரு எரிச்சல் ஊட்டும் அப்பாவாகட்டும், கடைசியில் மகனை நினைத்து மருகுவதும் ,உருகுவதும் தம்பி ராமையா.
ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.
