நாடகமாக இருக்கலாம் என்று நினைத்தனர்.
இல்லை இல்லை ,அவர்களை ரஜினிகாந்த் சேர்த்து வைத்துவிடுவார் என்று சிலர் சொன்னார்கள்.
நாட்கள் செல்ல செல்ல எல்லாமே மறந்து போகும் .ஐஸ்வர்யா அவரது கணவருடன் சேர்ந்து விடுவார் என்றார்கள் .ஆனால் போகப்போக தன்னுடைய பெயருக்குப் பின்னர் தொங்கிய தனுஷ் என்கிற பெயரை எடுத்து விட்டு அப்பாவின் பெயர் ரஜினிகாந்த் என்பதை பொருத்திக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா .
இயக்கத்தில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். இந்திப்பட உலகில் கால் வைப்பதற்கு அப்பாவின் செல்வாக்கு பயன்பட்டிருக்கிறது.சமூக வலைத்தளங்களில் இருந்து தனுஷ் என்கிற பெயர் நீக்கப்பட்டுவிட்டது.இன்ஸ்டா ,டிவிட்டர் ஆகிய சமூக வலைகளில் இன்று இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.