Jackson Durai is a 2016 Tamil horror comedy film witten and directed by Dharani Dharan, starring Sibiraj, Sathyaraj and Bindu Madhavi. RATING;1/5.
அயன்புரம் என்ற கிராமத்தில் ஜாக்சன் பேய் இருப்பதாக ஊரே அஞ்சி நடுங்குகிறது.. இதனால் உண்மை நிலையைக் கண்டறிய போலிஸ் கமிஷனர்,சிறப்பு எஸ்.ஐ. சிபி ராஜை அந்த ஊருக்கு அனுப்புகிறார். அதை தொடர்ந்து என்ன நடக்கிறது? அங்கு பேய் இருக்கிறதா! இல்லையா? அதை சிபி எப்படி கண்டுபிடிக்கிறார்? அதன் பின் என்ன நடக்கிறது? என்பது தான் மீதிக் கதை.பேய்க்கே பேப்பர் போட்டவன் நானாகத் தான் இருக்கும்’ என்று பஞ்ச் வசனம் பேசும் யோகி பாபு மட்டுமே, அவர் வந்து போகும் இடங்களில் சிரிக்க வைக்கிறார். பிந்து மாதவி வந்து போகிறார் அவ்வளவே! இந்தப் படத்தில் சத்யராஜ் நடித்திருப்பது மகன் சிபி ராஜுக்கு செய்த உதவி தான் என்றாலும் அது வீழலுக்கு இறைத்த நீர் போல் ஆகி விடுகிறது.. .சித்தார்த் விபின் பேய்ப் படத்துக்கான பின்னணி இசையில் ‘இரைச்சலை’ மட்டுமே கொடுத்துள்ளார். சிபி முதலில் எப்படி நடிப்பது என யாரிடமாவது டியூசன் கற்று வந்தால் நல்லது.தரணிதரன் திரைக்கதையில் பெரிதாக சொதப்பி இருக்கிறார். ஃபிளாஷ்பேக் காட்சிகள் திரையில் வந்து, பின்மண்டையில் ஓங்கி அடித்து நம்மை தலை தெறிக்க ஓட வைத்து விடுகிறது.