இரு மொழிகளில் உருவாகிய ,தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, வெளியாகிறது !
ராம் பொதினேனி நடிப்பில், பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், உருவாகி வரும் இந்தப்படம் பிரபல படங்களுடன் மோதுகிறது.
கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு திரைத்துறைகளிலும் பிரபலமான நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின் இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
முன்னதாக RAPO19 என அழைக்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு சமீபத்தில் அசத்தலான ஸ்டைலில் வெளியிடப்பட்டது.
மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு, படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவர் விசில் மகாலட்சுமியாக நவநாகரீக தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். சமீபத்தில், மகா சிவராத்திரி தினத்தில், ஆதியின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த அதிரடி திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுஜித் வாசுதேவ் செய்கிறார். தற்போது ‘தி வாரியர்’ படத்தின் முக்கியமான பகுதிகள் பரபரப்பாக தயாராகி வருகின்றன.