ரஜினியின் ‘கபாலி’ இம்மாதம் 15-ஆம் தேதி வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீரென்று ‘கபாலி’யின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது இதனையடுத்து இம்மாதம் 22-ஆம் தேதி’யாவது வெளியாகி விடும் என்று ஏதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள நிலைமையின் படி, 22-ஆம் தேதியும் ‘கபாலி’ ரிலீசாகாது என்கிறது கோடம்பாக்கம்! தற்போது கிடைத்த தகவலின் படி ’கபாலி’ அடுத்த மாதம் (ஆகஸ்ட்) தான் வெளியாகுமாம். அநேகமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெள்ளி கிழமை ‘கபாலி’ திரைக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் ரஜினி காந்த அடுத்த மாதம் தான் சென்னை திரும்ப வாய்ப்பு உள்ளதாக வும்கூ றப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.