கதையைத்தேடி அலைகிற கதாசிரியர்களுக்கு சிறு ஐடியா. ஆனால் உண்மை சம்பவமும் கூட. ஆகவே லாஜிக் மீறல் இல்லாமல் ஓட்டலாம் !
‘டெர்மினல் ‘என்கிற ஆங்கிலப்படத்தில் அரசியல் காரணங்களுக்காக ‘ஏர்போர்ட்லேயே ‘வாழ்ந்த ஒருவரை முன்னிலைப் படுத்தியிருந்தனர்.
அந்த கேரக்டரைப்போல ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள்.
அந்த மனிதனுக்கு தற்போது 60 வயதாகிறது.வெய் ஜியாங்கோ என்பது அந்த சீனரின் பெயர்.இந்த ஆள் 14 ஆண்டுகளுக்கு முன்பாக பீஜிங் ஏர்போர்ட்டில் நுழைந்தார். அதற்குப்பிறகு அவர் வீட்டுக்கு போகவேயில்லை.
மனைவிக்குப் பயந்து திரும்பவில்லை. கம்யூனிச நாடான சீனத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.அதிலும் பள்ளத்தை பாதுகாப்புக்குரிய பீஜிங் விமான நிலையத்தில் கட்டுப்பாடுகளை கடந்து 14 வருஷம் வாழ்ந்திருக்கிறான் என்றால் அந்தாளு எப்படிப்பட்ட ஆளாக இருக்க வேண்டும்?
அப்படி என்ன மனைவிக்கு பயம்?
“வீட்டுக்குப்போனால் என்னுடைய சுதந்திரம் காலி.! சிகரெட் பிடிக்க முடியாது. மது அருந்த முடியாது. இது என்னுடைய மனைவி போட்ட கண்டிஷன்.! அந்த போதையில் இல்லாமல் என்னால் இருக்கமுடியாது. அட பொம்பளை சுகம் கூட வேணாம். மதுவும் புகையும் இருந்தால் போதும்.!இதனால் அரசு வழங்கிய மாத அலவன்ஸ் அவளுக்கே கொடுத்து விட்டேன்.” என்கிறான் வெய் .