கதாநாயகர்கள் மது பழக்கத்தை ஊக்கப் படுத்துகிறார்கள் என்பது இயல்பு. ஒரு காலத்தில் திரை மறைவு பழக்கமாக இருந்து வந்த குடி தற்காலத்தில் நாகரிக வெளிப்பாடாகி விட்டது.
ஆனால் நடிகைகள் அதை பகிரங்கப்படுத்தியதில்லை. மது குடிப்பது மெது மெதுவாக அரசுகளின் அனுமதியோடு உற்சாகப்படுத்தப்படுவதால் பெண்களும் பார்களை நாடுவது இயல்பாகிவிட்டது. நாளைய இந்தியா மேலை நாகரீகத்துக்கு அடிமைப்பட்டதாகவே இருக்கும்.
அதனுடைய முன்னோட்டம்தான் நடிகைகள் மது விளம்பரங்களில் நடிப்பது.!
சோசியல் மீடியாக்கள் தங்களின் கவுரவமே அங்கேதான் இருக்கிறது என்பதைப்போல மது விளம்பரங்களை வெளியிடுகின்றன.
பூஜா ஹெக்டே ,லட்சுமிராய் ,ஹன்சிகா ,ராதிகா ஆப்தே ,பயல் ராஜ்புத் ,இலியானா ,காஜல் ஆகியோர் சில மது வகைகளை புரமோட் பண்ணுகிறார்கள்.இந்த பட்டியலில் தற்போது பிரகன்யா ஜெய்ஸ்வால் சேர்ந்திருக்கிறார்.
அதற்காக அவர் பெருந்தொகை வாங்கியிருக்கிறார்.
பெருந்தொகை கிடைத்தால்…?