நடிகர் விஜய்.நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம், நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில்,.தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் விஜய், பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் ஆகியோரது நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சனின் பல கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதிலளிக்கையில்,”எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு , கோவில், தர்கா, தேவாலயங்களுக்கு சென்றுள்ளேன் என்றும்,அண்மைக்காலமாக தனது தந்தையுடன் விஜய் பேசுவதில்லை என தகவல் வெளியான நிலையில், தந்தை குறித்து பேசிய விஜய்,, அப்பாக்கள் ஒரு குடும்பத்தின் வேர் என்றும், கடவுள் கண்களுக்கு தெரியமாட்டார்,
அப்பா கண்களுக்கு தெரிவார், இதுவே அப்பாவுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் கூறி நெகிழ வைத்தார்.மேலும் தனது தனது மகன் சஞ்சய் நடிக்கப்போகிறாரா அல்லது கேமராவுக்கு பின்னால் இருந்து செயல்பட போகிறாரா என தெரியவில்லை, இதற்காக தானும் காத்துக்கொண்டு இருப்பதாகவும்,அதே சமயம் சஞ்சையை தேடி படவாய்ப்புகள் வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சைக்கிளில் சென்று வாக்களித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,அது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய், வீட்டிற்கு பின்னால்தான் நான் ஓட்டுப்போடும் பள்ளி இருந்தது.
மாடியில் இருந்து இறங்கி வந்த போது மகனின் சைக்கிள் இருந்தது. மகன் நினைவு வந்தது… உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டேன்…அதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது’ஓட்டு போட்டு விட்டு வந்த பின்னர் அந்த செய்தியை பார்த்த என் மகன் உடனே போன் செய்து… அதெல்லாம் சரி, என் சைக்கிளுக்கு ஒண்ணும் ஆகலையே ன்னு கேட்கிறான் எனக்கூறி சிரித்தார்
. அதோடு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் தனது மன்றத்தினரை போட்டியிட செய்தது விஜய்யின் அரசியல் முன்னோட்டம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து நெல்ஸனெழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் தான் அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருவதாகவும்,தன்னை தளபதியாக மாற்றியது ரசிகர்கள் தான் என்றும்,நான் தளபதியாக இருக்க வேண்டுமா, அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்த பதில், விஜய்யின் எதிர்கால அரசியல் திட்டத்திற்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.